Advertisement
Advertisement
Advertisement

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை:பயிற்சி ஆட்டத்தில் அர்ஜெண்டினா, ஜெர்மனி அணிகள் வெற்றி!

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளில் யு.ஏ.இ அணியை வீழ்த்தி அர்ஜெண்டினாவும், ஓமனை வீழ்த்தி ஜெர்மனியும் வெற்றி பெற்றுள்ளன.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 17, 2022 • 16:22 PM
Oman vs Germany FIFA World Cup 2022 warm-up game: Fullkrug scores the winner as Germany wins 1-0
Oman vs Germany FIFA World Cup 2022 warm-up game: Fullkrug scores the winner as Germany wins 1-0 (Image Source: Google)

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் வரும் 20ஆம் தேதி முதல் கத்தாரில் தொடங்குகிறது. உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழா கால்பந்து உலகக்கோப்பை. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடருக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். கால்பந்து அணிகள் கத்தாருக்கு வந்து பயிற்சி போட்டிகளில் ஆட தொடங்கிவிட்டன. கத்தாரில் கால்பந்து உலக கோப்பை திருவிழா களைகட்ட தொடங்கிவிட்டது.

இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடும் 32 அணிகளும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் 4 அணிகள் என பிரித்து அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. 

  • குரூப் ஏ - கத்தார், ஈகுவடார், செனெகல், நெதர்லாந்து
  • குரூப் பி - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
  • குரூப் சி - அர்ஜெண்டினா, சௌதி அரேபியா, போலந்து, மெக்ஸிகோ
  • குரூப் டி - ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
  • குரூப் இ - ஸ்பெயின், கோஸ்டாரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்
  • குரூப் எஃப் - கனடா, பெல்ஜியம், மொராக்கோ, குரோஷியா
  • குரூப் ஜி - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேம்ரூன்
  • குரூப் ஹெச் - போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா

வரும் 20ஆம் தேதி முதல் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று தொடங்கும் நிலையில், அதற்கு முன் பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி பயிற்சி போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. 

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்த அர்ஜெண்டினா அணி, அமீரக அணியை ஒரு கோல் கூட அடிக்க அனுமதிக்கவில்லை. இதன்மூலம் ஆட்டநேர முடிவில் 5-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி அபார வெற்றி பெற்றது. அர்ஜெண்டினா அணியில் அதிகபட்சமாக ஏஞ்சல் டி மரியா 2 கோல்கள் அடித்தார். லியோனல் மெஸ்ஸி, ஜூலியன் மற்றும் ஜோக்வின் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஜெர்மனியும் ஓமனும் மோதிய மற்றொரு பயிற்சி போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 2ஆவது பாதியில் ஜெர்மனி அணி ஒரு கோல் மட்டும் அடித்து வெற்றி பெற்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement