
Paris Masters: Rafael Nadal loses to Tommy Paul (Image Source: Google)
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரிஸில் கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்கள் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 31ஆம் தேதி முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அமெரிக்க வீரரான டாமி பாலினை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் முதல் செட் ஆட்டத்தில் ரஃபேல் நடால் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். ஆனால் அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் பால் 7-6 என்ற புள்ளிகள் அடிப்படையில் இரண்டாவது செட்டை கைப்பற்றி ஆச்சரியம் கொடுத்தார்.