பாரிஸ் மாஸ்டர்ஸ்: ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்து பட்டத்தை தட்டிச்சென்றார் ரூனே!
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஹோல்கர் ரூனே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
டென்னிஸ் விளையாட்டின் பிரபல தொடரான பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்த மாதம் 29ஆம் தேதி ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் உலகின் 6ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை, 10ஆம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே எதிர்கொண்டார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் சூதாரித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூனே இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் இப்போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் கடைசிவரை போராடிய நோவாக் ஜோகோவிச் 5-7 என்ற புள்ளிகணக்கில் ரூனேவிடம் மூன்றாவது செட்டை இழந்தார். இதன்மூலம் ஹோல்கர் ரூனே 3-6,6-3,7-5 என்ற புள்ளிகணக்கில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி பாரிஸ் மாஸ்டர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now