
PKL 2022: Ajinkya Pawar raid helps Tamil Thalaivas beat Telugu Titans by 52-24! (Image Source: Google)
புரோ கபடி லீக் ஆட்டத்தின் ஒன்பதாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற தமிழ் தலைவாஸுக்கு இது முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.
அதன்படி ஆட்டத்தின் முதல் நிமிடம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி அடுத்தடுத்த புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தில் முன்னிலைப் பெற்றது. அதிலும் ஆட்டத்தின் 7ஆவது நிடத்திலேயே தெலுங்கு டைட்டன்ஸை ஆல் அவுட்டாகியது.
அதன்பின் விஸ்வரூபமெடுத்த அஜிங்கியா பவர் அடுத்தடுத்து இரு முறை தெலுங்கு டைடன்ஸ் அணியை மொத்தமாக காலிசெய்து புள்ளிகளை கைப்பற்றினார். இதன் காரனமாக இன்றைய போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 4 முறை தமிழ் தலைவாஸ் அணி வீரர்களால் ஆல் அவுட்டாக்கப்பட்டனர்.