
PKL 2022: Haryana Steelers beat Tamil Thalaivas by 27-22 (Image Source: Twitter)
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்டதி.
முன்னதாக, தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிராக 31-31 என்ற புள்ளி கணக்கில் போட்டியை சமன் செய்தது. இதனால், நேற்றைய போட்டியில் அரியானாவுடன் வெற்றிகொள்ள வேண்டும் என்ற முனைப்பில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது.
தமிழ் தலைவாஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அரியானா 27 புள்ளிகளையும் தமிழ் தலைவாஸ் அணி 22 புள்ளிகளையும் பெற்றது. இதனால், தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.