
PKL 2022: Puneri confirm semifinal spot after win over Patna Pirates! (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் முதல் 2 அணிகளாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான் - பாட்னா பைரட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஏற்கெனவே புனேரி பல்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.
அதன்படி இப்போட்டியின் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புனேரி பல்தான் அணி அடுத்தடுத்து புள்ளிகளைக் கைப்பற்றி முன்னிலையைப் பெற்றது. இப்போட்டியில் தொடர்ந்து போராடிய பாட்னா பைரட்ஸ் அணியால் எதிரணியின் டிஃபென்ஸை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.