Advertisement

PKL 2022: போராடி தோல்வியடைந்தது தமிழ் தலைவாஸ்; இறுதிப்போட்டி கனவை நனவாக்கியது புனேரி!

புனேரி பல்தானுக்கு எதிரான புரோ கபடி லீக் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெறும் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 15, 2022 • 21:56 PM
PKL 2022: Puneri Paltan will play their 1st Final on December 17!
PKL 2022: Puneri Paltan will play their 1st Final on December 17! (Image Source: Google)

ஒன்பதாவது புரோ கபடி லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று முன்தினம் இந்த தொடருக்கான நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக அரங்கேறியது. இந்த நிலையில், இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடக்கவுள்ளன. இந்த ஆட்டங்களிலும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், மும்பையில் இன்று இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில், இரவு 7.30 மணிக்கு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. 

இரவு 8.30 மணிக்கு தொடங்கிய 2ஆவது அரைஇறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.

புனேரி பால்டன் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததன் மூலமாக நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மறுபுறம், யு.பி. யோத்தாசுக்கு எதிரான நாக்-அவுட் சுற்றில் டைபிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்று முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது தமிழ் தலைவாஸ். 

இந்நிலையில் பரபரப்பு மற்றும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி டாஸை வென்ற ரைடை தேர்வு செய்ததுடன், முதல் ரைடிலிருந்தே புள்ளிகளையும் கைப்பற்ற தொடங்கியது. பின் நாங்களும் சளித்தவர்கள் கிடையாது என்பது போல புனேரி பல்தானும் அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றி டஃப் கொடுத்தது.

இருப்பினும் முதல் பாதி ஆட்டமுடிவில் தமிழ் தலைவாஸ் அணி 6 புள்ளிகளுடன் முன்னிலைப் பெற்றிருந்தது. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் தொடக்கம் முதலே புனேரி பல்தான்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த புள்ளிகளை பெற, தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளை இழந்தது. 

ஒரு கட்டத்தில் புனேரி பல்தான்ஸ் அணி தமிழ் தலைவாஸை ஓவர்டெக் செய்து முன்னிலைப் பெற்றது. ஆனால் அதன்பின் சூதாரித்து விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று புள்ளிகளை சமன் செய்தது. இருப்பினும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸை ஆல் அவுட் செய்ததுடன் 6 புள்ளிகள் முன்னிலைப் பெற்றது.

அதன்பின் இறுதிவரை போராடிய தமிழ் தலைவாஸ் அணியால் எதிரணியின் டிஃபென்ஸை தாண்டி புள்ளிகளை கைப்பற்ற முடியவில்லை. இதன்மூலம் ஆட்ட நேர முடிவில் புனேரி பல்தான் அணி 39-37 என்ற புள்ளிகணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தியதுடன், முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

புனேரி பல்தான் அணி தரப்பில் பங்கஜ் மோஹிதே 13 ரைடுகளில் 16 புள்ளிகளைப் பெற்று அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இத்தோல்வியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணியின் கோப்பை கணவும் தகர்ந்ததுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement