-mdl.jpg)
PKL 9: Akash Shinde's Super 10 powers Puneri Paltan to massive victory over U.P. Yoddhas (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாட்னா பைரட்ஸ் அணி 34- 31 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது போட்டியில் தபாங் டெல்லி- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் அணி 45- 40 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர் வீரர் அர்ஜுன் தேஷ்வால் தனது அட்டகாசமான ரெய்டு மூலம் 4 போனஸ் புள்ளிகள் உட்பட 16 புள்ளிகளை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.