
PKL 9: Amit Hooda shines as Dabang Delhi defeat U Mumba to keep Playoffs hopes alive (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் முதல் 2 அணிகளாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தபாங் டெல்லி அணியால் பிளே ஆஃப் சுற்றில் நீடிக்க முடியும் என்ற நிலையில் களமிறங்கியது.
அதன்படி தொடக்கம் முதலே தபாங் டெல்லி அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்றது. அதேசமயம் யு மும்பா அணியின் ரெய்டர்களையும் தபாங் டெல்லி டிஃபென்ஸ் தடுத்து நிறுத்தினர்.