Advertisement
Advertisement
Advertisement

PKL 2022: யு மும்பாவை வீழ்த்தி பிங்க் பேந்தர்ஸ் த்ரில் வெற்றி!

யு மும்பா அணிக்கெதிரான புரோ கபாடி லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 42-39 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 08, 2022 • 10:49 AM
PKL 9: Arjun Deshwal shines as Jaipur Pink Panthers clinch hard-fought win Over U Mumba
PKL 9: Arjun Deshwal shines as Jaipur Pink Panthers clinch hard-fought win Over U Mumba (Image Source: Google)

12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடர் புனேவில் நடைபெற்று வருகிறது. 

இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 42-39 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜெய்ப்பூர் வீரர் அர்ஜுன் தேஷ்வால் இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 5 போனஸ் புள்ளிகள் உட்பட 15 புள்ளிகளை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 37 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் இரண்டாவது இடத்திலும், யு மும்பா அணி 33 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளன.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement