Advertisement

PKL 2022: யு மும்பாவை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!

யு மும்பா அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 32-22 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 15, 2022 • 22:20 PM
PKL 9: Arjun Deshwal shines as Jaipur Pink Panthers register massive victory
PKL 9: Arjun Deshwal shines as Jaipur Pink Panthers register massive victory (Image Source: Google)

12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 32-22 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

ஜெய்ப்பூர் அணி தரப்பில் அபாரமாக விளையாடிய அர்ஜுன் தேஷ்வால் 1 போனஸ் புள்ளி உட்பட 13 புள்ளிகளை குவித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 48 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement
வீடு Special Live Cricket Video Sports