
PKL 9: Arjun Deshwal's superlative performance helps Jaipur Pink Panthers register big win (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இரண்டாவது கட்டமாக இந்த போட்டிகள் புனேவில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த தொடர் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யுபி யோதாஸ்-ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைப் பெற்றது.
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 42-29 என்ற புள்ளி கணக்கில் யுபி யோதாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.