
PKL 9: Ashish shines as U Mumba win against Telugu Titans (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா -தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யு மும்பா அணி அடுதடுத்து புள்ளிகளைப் பெற்றது. அதற்கேற்றது போலவே தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் விடாப்பிடியாக புள்ளிகளைப் பெற்றது.
ஆனால் ஆட்டநேர முடிவில், யு மும்பா அணி 40-37 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. யு மும்பா அணி தரப்பில் சிறப்பாக ரெய்டு சென்ற அஷிஷ் தனது அட்டகாசமான ரெய்டு மூலம் 12 புள்ளிகள் பெற்று கொடுத்தார். இதன் மூலம் இந்த தொடரில் யு மும்பா 6 வெற்றிகளுடன் (31 புள்ளிகள்) புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.