-mdl.jpg)
PKL 9: Ashish's last-second raid hands U Mumba thrilling win over Puneri Paltan (Image Source: Google)
ஒன்பதாவது சீசன் புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் அபாரமாக விளையாடி புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
சீசனின் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த தபாங் டெல்லி அணி, அதன்பின்னர் தொடர் தோல்விகளை தழுவியதன் விளைவாக 5ஆம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்று புனேவில் நடந்த முதல் போட்டியில் யுபி யோதாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய யுபி யோதாஸ் அணி ஆட்டநேர முடிவில் 40-34 என ஹரியானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.