
PKL 9: Aslam Inamdar's stunning last-second raid leads Puneri Paltan to a thrilling win (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் ஒன்பதாவது சீசன் கடந்த 7ஆஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி இந்த சீசனில் 4ஆவது வெற்றியை பதிவு செய்தது.
இதை தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது போட்டியில் புனேரி பல்தான் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
அதிலும் ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் சம புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தின் பரபரப்பை கூட்டினர். இறுதியில் புனேரி பல்தான அணி 26-25 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.