-mdl.jpg)
PKL 9: Bengal Warriors, Tamil Thalaivas share points (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான புரோ கபடி லீக் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இதில் புனேயில் நேற்று தொடங்கிய லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற்றது. ஆனாலும் அடுத்து அதிரடியாக ஆடிய பெங்கால் வாரியஸ் அணி புள்ளிகளை வேகமாக சேர்த்தது. இதனால் இந்த போட்டியில் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிரிகத்தது.
ஆனால் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டம் முடிவில் 41-41 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. முந்தைய 2 ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றிக்கனியை பறித்த தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டியில் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் டை ஆனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அமைந்துள்ளனர்.