
PKL 9: Bengaluru Bulls Hold Off U.P Yoddhas For Crucial Win, Qualify For Play-offs (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் முதல் 2 அணிகளாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன.
பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்புள்ள 2 அணிகளான பெங்களூரு புல்ஸ் மற்றும் யுபி யோதாஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் ஜெயித்தால் பிளே ஆஃபிற்கு முன்னேறலாம் என்பதால் நீயா நானா போட்டியில் இரு அணிகளும் வெற்றி வேட்கையுடன் களமிறங்கின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடி புள்ளிகளை பெற்றுவந்தன. பரபரப்பான இந்த போட்டியில் 38-35 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பெங்களூரு புல்ஸ் அணி 3ஆவது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.