Advertisement
Advertisement
Advertisement

PKL 2022: பெங்களூரு புல்ஸிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்!

புரோ கபடி லீக் தொடரில் நேற்று பெங்களூரு புல்ஸை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 36-23 என தோல்வியடைந்தது. 

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 14, 2022 • 11:00 AM
PKL 9: Bengaluru Bulls survive late surge from Thalaivas to win 40-34
PKL 9: Bengaluru Bulls survive late surge from Thalaivas to win 40-34 (Image Source: Google)

புரோ கபடி லீக் தொடரின் ஒன்பதாவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்த தபாங் டெல்லி அணி பின்னர் தொடர் தோல்விகளை தழுவி புள்ளி பட்டியலில் பின் தங்கிவிட்டது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ், புனேரி பல்தான், யு மும்பா அணிகள் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை தழுவிய தமிழ் தலைவாஸ் அணி, பின்னர் தொடர் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் மேலே வந்தது. ஆனால் கடைசி 2 போட்டிகளில் தோல்வியை தழுவி ஏமாற்றமடைந்தது.

புனேவில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக  நடந்த இந்த போட்டியில் கடைசியில் 40-34 என பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இதன்மூலம் பெங்களூரு புல்ஸ் அணி 46 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டிளின் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இத்தோல்வியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 35 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement