
PKL 9: Dabang Delhi beat Telugu Titans 46-26, rise to top of the table (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் கடந்த 7ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அடுத்தடுத்த போட்டிகள் புனே மற்றும் ஹைதராபாத்திலும் நடக்கின்றன.
பெங்களூரு காண்டிவீரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த தொடரின் முதல் 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் தபாங் டெல்லி அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை அள்ளியது.