Advertisement

PKL 2022: யு.பி. யோதாஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது தபாங் டெல்லி!

பிகேஎல் தொடரில் நேற்று நடந்த  பரபரப்பான போட்டியில் 44-42 என்ற புள்ளிக்கணக்கில் யு.பி யோதாஸை வீழ்த்தி தபாங் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan October 13, 2022 • 08:54 AM
PKL 9: Dabang Delhi KC pull off improbable comeback win against UP Yoddhas
PKL 9: Dabang Delhi KC pull off improbable comeback win against UP Yoddhas (Image Source: Google)

புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்த புரோ கபடி லீக் தொடரின் முதல் 41 போட்டிகள் பெங்களூருவில் நடந்துவருகின்றன. 

பெங்களூரு காண்டிவீரா மைதானத்தி நேற்று நடந்த முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 42-33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதன்பின் நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி - யு.பி.யோதாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில் மிகச்சிறப்பான மற்றும் சுவாரஸ்யமான போட்டியாக இது அமைந்தது. 

முதல் பாதியில் 14 புள்ளிகள் பின்னடைவில் இருந்த தபாங் டெல்லி அணி, அதன்பின்னர் அபாரமாக விளையாடி புள்ளிகளை சேர்த்தது. அதிலும் அந்த அணி அஃபென்ஸ், டிஃபென்ஸ் என இரு பிரிவிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலன் அணியின் புள்ளிகளும் மளமளவென உயர்ந்தது.

அதிலும் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் தபாங் டெல்லி 4 புள்ளிகளையும், யு.பி.யோதாஸ் அணி 2 புள்ளிகளையும் பெற, 44-42 என்ற புள்ளிக்கணக்கில் யு.பி.யோதாஸை வீழ்த்தி டபாங் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. 

யு.பி.யோதாஸ் அணி சார்பில் 24 ரெய்டு சென்ற சுரேந்தர் கில் 21 புள்ளிகளை பெற்றார். அபாரமாக விளையாடிய சுரேந்தர் தான், யு.பி. யோதாஸ் அணி பெற்ற புள்ளிகளில் பாதி புள்ளிகளை பெற்று கொடுத்தார். 

இந்த போட்டியில் பெற்ற வெற்றியையடுத்து, விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் தபாங் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. யு.பி. யோதாஸ் அணி 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 5ஆம் இடத்தில் உள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement