Advertisement

PKL 2022: பெங்கால் வாரியர்ஸை பந்தாடியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!

பெங்கால் வாரியர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 39-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan October 19, 2022 • 10:50 AM
PKL 9: Deshwal, Ajith's Clinical Performance Helps Pink Panthers Thrash Bengal Warriors
PKL 9: Deshwal, Ajith's Clinical Performance Helps Pink Panthers Thrash Bengal Warriors (Image Source: Google)

புரோ கபடி லீக் தொடரின் ஒன்பதாவது சீசன் கடந்த 7ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் அதன் பிறகு ஹாட்ரிக் வெற்றிகளை குவித்த ஜெய்ப்பூர் அணி அந்த வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்கியது. அதே போல் போட்டியின் ஆரம்பம் முதலே ஜெய்ப்பூர் அணி ஆதிக்கமும் செலுத்தியது.

குறிப்பாக ஜெய்ப்பூர் வீரர் அர்ஜுன் தேஷ்வால் தனது அட்டகாசமான ரெய்டுகளின் மூலம் புள்ளிகளை குவித்து வந்தார். இவரை தடுக்க பெங்கால் அணி வீரர்கள் தடுமாறினர். 

இறுதியில் ஜெய்ப்பூர் அணி 39-24 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் அணியை பந்தாடி இந்த சீசனில் 4ஆவது வெற்றியை பதிவு செய்தது. இந்த சீசனில் ஜெய்ப்பூர் அணி சக்தி வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 4 வெற்றிகளுடன் 21 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்திலும், பெங்கால் வாரியர்ஸ் 15 புள்ளிகளுடன் முன்றாம் இடத்திலும் நீடித்து வருகின்றன.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement