
PKL 9: Fazel's 400th tackle point galvanizes Puneri Paltan to victory over Tamil Thalaivas (Image Source: Google)
12 அணிகள் இடையேயான புரோ கபடி லீக் போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 36- 33 என்ற கணக்கில் அரியானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் தமிழ் தலைவாஸ்- புனேரி பால்டன் அணிகள் மோதின.
கடந்த 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 டிரா என தமிழ் தலைவாஸ் அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்த நிலையில் புனே அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான போட்டியில் தமிழ் தலைவாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்றனர்.