-mdl.jpg)
புரோ கபடி 9ஆவது சீசன் லீக் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவார விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் – யு மும்பா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் – யு மும்பா ஆகிய இரு அணி வீரர்களும் சம பலத்துடன் விளையாடினர். இதனால், இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 16 புள்ளிகளும் யு மும்பா 15 புள்ளிகளும் எடுத்தன. இதில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தில், யு மும்பா அணி சிறப்பாக விளையாடி புள்ளிகளை எடுத்தது. இதனால், ஆட்டத்தின் முடிவில் யு மும்பா அணி 39 புள்ளிகளையும் தமிழ் தலைவாஸ் அணி 32 என்ற புள்ளிகளையும் எடுத்திருந்தன. இதன் மூலம், யு மும்பா அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.