
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.
புள்ளி பட்டியலில் அடுத்த 4 இடங்களை பிடித்த பெங்களூரு புல்ஸ், யுபி யோதாஸ், தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறின. முதல் பிளே ஆஃப் போட்டியில் டபாங் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணியும், அடுத்த பிளே ஆஃப் போட்டியில் யு.பி யோதாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூர் - பெங்களூரு ஆகிய 2 அணிகளுமே வலுவான அணிகள் என்பதாலும், இந்தசீசனில் 2 அணிகளுமே அபாரமாக ஆடியதாலும் இந்த போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.