Advertisement
Advertisement
Advertisement

PKL 2022: பாட்னா பைரட்ஸை பந்தாடியது பெங்கால் வாரியர்ஸ்!

புரோ கபடி லீக் தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 54-26 என்ற புள்ளிக்காணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan October 16, 2022 • 09:53 AM
PKL 9: Maninder Singh records Super 10 as Bengal Warriors thrash Patna Pirates
PKL 9: Maninder Singh records Super 10 as Bengal Warriors thrash Patna Pirates (Image Source: Google)

புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் கடந்த 7ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அடுத்தடுத்த போட்டிகள் புனே மற்றும் ஹைதராபாத்திலும் நடக்கின்றன.

பெங்களூரு காண்டிவீரா ஸ்டேடியத்தில் இன்று நடந்த முதல் போட்டியில் பாட்னா பைரட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்கால் வாரியர்ஸ் அணி புள்ளிகளைப் பெற்று அசத்தியது.

இதன்காரணமாக முதல் பாதி ஆட்டத்திலேயே பெங்கால் வாரியர்ஸ் அணி 26-11 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையைப் பெற்றது. அதன்பின் தொடங்கிய இரண்டாம் பாதியிலும் சிறப்பாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு புள்ளிகள் மேல் புள்ளிகள் கிடைத்துகொண்டே இருந்தன.

இதன்மூலம் ஆட்டநேர முடிவில் பெங்கால் வாரியர்ஸ் அணி 54 புள்ளிகளைப் பெற்றது. அதேசமயம் இறுதிவரை போராடிய பாட்னா பைரட்ஸ் அணியால் 26 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதன்மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி 54 -26 என்ற புள்ளிக்கணக்கில் அதவாது 28 புள்ளிகள் வித்தியாசத்தில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. பெங்கால் வாரியர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய மணீந்தர் சிங் 12 புள்ளிகளையும், ஸ்ரீகாந்த் ஜாதவ் 9 புள்ளிகளையும் கைப்பற்றினர். 

இந்த வெற்றியின் மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி நடப்பு சீசனில் 3 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியளின் மூன்றாம் இடத்திலும், பாட்னா பைரட்ஸ் அணி 3 தோல்வி, ஒரு டிரா என புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement