
PKL 9: Maninder Singh shines as Bengal Warriors thrash Bengaluru Bulls (Image Source: IANS)
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் கடந்த 7ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புள்ளிகளைப் பெற்றது. அதிலும் பெங்கால் வாரியர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மனீந்தர் சிங் சிறப்பாக விளையாடி 11 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார்.
அவருக்கு அடுத்தபடியாக அந்த அணியில் ஸ்ரீகாந்த் ஜாதவ் சிறப்பான ரைடின் மூலம் 6 புள்ளிகளை அணிக்கு பெற்று தந்தார்.