
PKL 9: Narender stars in Tamil Thalaivas' second straight victory (Image Source: Google)
ஒன்பதாவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் அபாரமாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தொடர் தோல்விகளை தழுவிவருகிறது.
கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸிடம் தோற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, நேற்று பெங்களூரு புல்ஸை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடியதால் போட்டி கடுமையாக இருந்தது.
இறுதியில் பெங்களூரு புல்ஸ் அணி 37-31 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தியது. கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸிடம் தோற்ற ஜெய்ப்பூர் அணி நேற்று பெங்களூருவிடமும் தோல்வியைத் தழுவியது.