
PKL 9: Naveen Kumar stars as Dabang Delhi register consecutive victories (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கம் முதலே தபாங் டெல்லி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைப் பெற்று அசத்தியது.
இதனால் ஆட்டநேர முடிவில் தபாங் டெல்லி அணி 42-30 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் பிரபஞ்சன் 9 புள்ளிகளைக் கைப்பாற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.