
PKL 9: Naveen Kumar stars in thriller as Dabang Delhi continues winning streak (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அடுத்த போட்டிகள் புனே மற்றும் ஹைதராபாத்திலும் நடக்கின்றன.
இந்த சீசனில் இதுவரை தபாங் டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகின்றன. அதன்படி நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தபாங் டெல்லி மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
இந்த சீசனில் முதல் 4 போட்டிகளிலும் தோல்வியே சந்தித்திராத தபாங் டெல்லி அணிக்கு ஹரியானா அணி செம டஃப் கொடுத்தது. ஹரியானா அணி டெல்லிக்கு முதல் தோல்வியை பரிசளிக்கும் சூழல் இருந்தது. 36-36 என்று சமனில் இருந்த நிலையில், கடைசியில் 38-36 என்ற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி தபாங் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.