Advertisement
Advertisement
Advertisement

PKL 2022: ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்!

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 36-33 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 09, 2022 • 22:18 PM
PKL 9: Neeraj Narwal stars in Bengaluru Bulls' hard-fought win over Haryana Steelers
PKL 9: Neeraj Narwal stars in Bengaluru Bulls' hard-fought win over Haryana Steelers (Image Source: Google)

12 அணிகள் இடையேயான புரோ கபடி லீக் போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுகிறது. 

இந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு புல்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்றது. அதன்பின் சூதாரித்து விளையாடிய ஹரியானா அணியும் புள்ளிகளைக் கைப்பற்றியது.

ஆனால் ஆட்டநேர முடிவில் பெங்களூரு புல்ஸ் அணி 36- 33 என்ற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நீரஜ் நார்வால் 9 புள்ளிகளைப் பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு புல்ஸ் அணி 41 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 30 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 11ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement