
PKL 9: Pardeep Narwal Helps U.P Yoddhas Ease Past U Mumba 38-28 (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், யுபி யோதாஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 4 அணிகள் இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இன்று நடந்த முதல் போட்டியில் யுபி யோதாஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதின. ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதலே யு மும்பா அணி மீது ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய யு.பி யோதாஸ் அணி 38-28 என்ற கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி வெற்றி பெற்ற யுபி யோதாஸ் அணி புள்ளி பட்டியலில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியது.
அடுத்த போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் சிறப்பாக ஆடிய நிலையில், கடைசியில் 40-34 என்ற கணக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.