
PKL 9: Pardeep Narwal stars with 22 points as U.P. Yoddhas decimate Dabang Delhi (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி 33-33 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தபாங் டெல்லி-யுபி யோதாஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் யுபி யோதாஸ் அணி 50-31 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.