-mdl.jpg)
PKL 9: Patna Pirates shock table-toppers Dabang Delhi to pick up first win of season (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும் அதற்கடுத்த போட்டிகள் புனே மற்றும் ஹைதராபாத்தில் நடக்கின்றன.
பெங்களூரு காண்டிவீரா மைதானத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் தபாங் டெல்லி - பாட்னா பைரட்ஸ் அணிகல் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளுமே அபாரமாக விளையாடிய இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது.
பரபரப்பான இந்த போட்டியில் கடைசியில் 37-33 என பாட்னா பைரட்ஸ் அணி தபாங் டெல்லியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. அதிலும் பாட்னா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் குலியா 13 புள்ளிகளைப் பெற்று அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.