
PKL 9: Patna Pirates, Tamil Thalaivas play out thrilling match to tie 33-33 (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான ஒன்பதாவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு புள்ளிகளை கைப்பற்றினர்.
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 33-33 என்ற புள்ளிகளைப் பெற்றதன் காரணமாக இப்போட்டி'டை' ஆனது. தமிழ் தலைவாஸ் அணி சார்பில் சிறப்பாக விளையாடிய நரேந்தர் 3 போனஸ் புள்ளிகள் உட்பட 16 புள்ளிகளை குவித்து அசத்தினார்.