
PKL 9: Puneri Paltan, Haryana Steelers play out thrilling 27-27 tie (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின.
இதில் தமிழ் தலைவாஸ் 38-27 என்ற கணக்கில் ஜெய்ப்பூரை துவம்சம் செய்து தொடர் தோல்விகளுக்கு பிறகு இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இதையடுத்து இரவு 8.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஹரியான ஸ்டீலர்ஸ்-புனேரி பால்தன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 27-27 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.