
PKL 9: Raiders Shinde, Inamdar, Goyat shine as Puneri Paltan beat Bengal Warriors (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-புனேரி பால்தான் அணிகள் மோதின. இந்த போட்டியின் தொடக்கம் முதலே புனேரி பல்தான் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைப் பெற்றது.
இதன்மூலம் போட்டி முடிவில் புனேரி பல்தான் அணி 43-26 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான இரண்டு லீக் போட்டியிலும் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது.