
PKL 9: Sushil, Rakesh Narwal help Haryana Steelers sign off with big win against Tamil Thalaivas (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ், யு.பி யோதாஸ், தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி ஆகிய 6 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறின.
லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்று பெங்களூரு புல்ஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் சிறப்பாக விளையாடிய நிலையில், கடைசியில் யு மும்பா அணி 36-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்த போட்டியில் தமிழ் தலைவாஸும் ஹரியானா ஸ்டீலர்ஸும் மோதின. ஏற்கனவே பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட தமிழ் தலைவாஸ் அணியும், இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற ஹரியானா ஸ்டீலர்ஸும் இன்றைய போட்டியில் மோதின.