
PKL 9: Tamil Thalaivas beat Jaipur Pink Panthers by 38-27 (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின.
இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் 6 போட்டிகளில் 1 வெற்றி, 1 டிரா, 4 தோல்வி என புள்ளி பட்டியலில் 11ஆவது இடத்தில் இருந்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது.
அதே போல் இன்றைய போட்டியில் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக தலைவாஸின் நரேந்தர் தனது அட்டகாசமான ரெய்டுகளின் மூலம் 13 புள்ளிகளை குவித்தார்.