
PKL 9: Tamil Thalaivas clinch thriller against Puneri Paltan, keep unbeaten run intact (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை தழுவிவந்த தமிழ் தலைவாஸ் அணி, தொடரின் பிற்பாதியில் வலுவான அணிகளை எல்லாம் தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றிகளை பெற்றுவருகிறது.
தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி, நேற்றைய போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது. இந்த சீசனில் அபாரமாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள புனேரி பல்தானை இன்று எதிர்கொண்டது தமிழ் தலைவாஸ் அணி.
தமிழ் தலைவாஸ் - புனேரி பல்தான் இடையேயான போட்டி மிகக்கடும் போட்டியாக இருந்தது. இரு அணிகளும் அபாரமாக விளையாடின. இரு அணிகளும் சமமாக புள்ளிகளை பெற்றுவர, வெற்றிக்காக கடுமையாக போராடின.