
PKL 9: Tamil Thalaivas register comfortable win over Bengal Warriors (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த புள்ளிகளைப் பெற்றன.
இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ் தலைவாஸ் அணி அடுத்தடுத்த புள்ளிகளை கைப்பற்றியது. இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி 35-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.