
PKL 9: Telugu Titans defeat U Mumba, end 12-match losing streak (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இரண்டாவது கட்டமாக இந்த போட்டிகள் புனேவில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த தொடர் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யுபி யோதாஸ் - ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 42-29 என்ற புள்ளி கணக்கில் யு.பி.யோத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் - யு மும்பா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைப் பெற்றனர்.