Advertisement

PKL 2022: பெங்கால் வாரியர்ஸ் - யுபி யோதாஸ் போட்டி டிராவில் முடிவு!

பரபரப்பாக நடைபெற்ற பெங்கால் வாரியர்ஸ்- யு.பி.யோதாஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி 41-41 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 08, 2022 • 21:47 PM
PKL 9: UP Yoddhas tackle Maninder in the last second to tie 41-41 with Bengal Warriors
PKL 9: UP Yoddhas tackle Maninder in the last second to tie 41-41 with Bengal Warriors (Image Source: Google)

12 அணிகள் இடையேயான புரோ கபடி 'லீக்' போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. இதுவரை 65 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் புனேரி பல்தான் 38 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. 

அதற்கு அடுத்தப்படியாக ஜெய்ப்பூர் 37 புள்ளியுடனும், பெங்களூர் புல்ஸ் 36 புள்ளியுடனும், யு மும்பை, தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் தலா 33 புள்ளிகளுடனும் இருக்கிறது.

இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்- யு.பி.யோதா அணிகள் மோதின. 

தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்றனர். இதனால் இந்த போட்டி 41-41 என்ற புள்ளிக்கணக்கில் டிராவானது.

பெங்கால் வாரியர்ஸ் அணி தரப்பில் அட்டகாசமான ரெய்டு சென்ற மனீந்தர் சிங் 3 போனஸ் புள்ளிகள் உட்பட 18 புள்ளிகளை குவித்து அசத்தினார். அதேசமயம் யு.பி.யோதா அணி தரப்பில் ரோஹித் 16 புள்ளிகளையும், பிரதீப் நர்வால் 11 புள்ளிகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement