
PKL: Dabang Delhi KC strong second half performance earns them a tie, seal playoff spot (Image Source: Google)
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 46 புள்ளிகள் எடுத்தன. இதையடுத்து பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி 46-46 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.
இதில் தபாங் டெல்லி அணி தரப்பில் நவீன் குமார் 16 புள்ளிகளையும், பெங்கால் வாரியர்ஸ் தரப்பில் மனிந்தர் சிங் 18 புள்ளிகளையும் கைப்பற்றி அசத்தினர்.