
PKL9: Bengaluru Bulls defeat Tamil Thalaivas 45-28, climb to third place in points table (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அடுத்த போட்டிகள் புனே மற்றும் ஹைதராபாத்திலும் நடக்கின்றன.
இந்த சீசனில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது.
முதல் 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றி மட்டுமே பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, நேற்று பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி அபாரமாக விளையாடி தமிழ் தலைவாஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தியது.