
12 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது. இதில் நேற்று புனேயில் நடைபெற்ற ஒரு போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. கடந்த போடட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் டிரா செய்த தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் சேர்த்தது. இதனால் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று யூகிக்க மடியாத நிலை ஏற்பட்ட நிலையில், இறுதிக்கட்டத்தில் அசத்தலாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 39-31 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
தமிழ் தலைவாஸ் அணி சார்பில் அஜிங்கியா பவார் 12 புள்ளிகள் பெற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் மூலம் 10 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி 4 தோல்வி 2 டிரா என 28 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.