
12 அணிகளுடன் 9ஆவது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்நிலையில், புரோ கபடி லீக்கில் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற 94ஆவது போட்டியில் தமிழ் தலைவாஸ் – யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி அடுத்தடுத்த புள்ளிகளைப் பெற்றது.
ஏற்கெனவே அடுத்தடுத்த தோல்விகளை தழுவிய யு மும்பா அணி இப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியும் அடுத்தடுத்த புள்ளிகளை கைப்பற்ற முயற்சித்து செய்தது.