
PV Sindhu knocked out of India Open in opening round (Image Source: Google)
இந்தியா ஓபன் பேட்மிண்டன் நேற்று (ஜனவரி 17) தொடங்கியது. வரும் 22ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பேட்மிண்டன் தொடரில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து, தாய்லாந்து வீராங்கனை சுபநிடா கேடதாங்கை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் அபாரமாக தாய்லாந்து வீராங்கனை சுபநிடா கேடதாங் 21-12, 22-20 என்ற நேர் செட் கணக்கில் பிவி சிந்துவை வீழ்த்தி அதிர்த்தில் அளித்தார். இந்த தோல்வியின் மூலம் பிவி சிந்து தொடரை விட்டு வெளியேறினார்.
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2 பதக்கங்களை வென்று கொடுத்துள்ள பிவி சிந்து, இந்திய ஓபன் பேட்மிண்டனில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியும் சோகமும் அடைய செய்துள்ளது.