
ஆசிய பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் (ஆர்ஐஎல்) தலைவரான முகேஷ் அம்பானி, ஏற்கனவே பல துறைகளில் வெற்றிகரமாக கோலேச்சி வருகின்றார். விளையாட்டு துறையில் ஏற்கனவே தனது முதலீட்டினை செய்துள்ளவர். தற்போது அதனை மேம்படுத்த திட்டமிடுள்ளதாகவும் தெரிகிறது. தற்போது இங்கிலாந்தின் உலக புகழ்பெற்ற கால்பந்து அணியான லிவர்புல் அணியை வாங்குவதற்கான ஏலத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லிவர்புல் அணியின் தற்போதைய உரிமையாளரான பென்வே ஸ்போர்ட்ஸ் குரூப் (FSG), அணியை விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்கள் லிவர்பூல் அணியை வாங்கினர். இந்த அணியை தான் தற்போது 4 பில்லியன் பவுண்ட்டுக்கு விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து அணியைத் தான் பில்லியனர் முகேஷ் அம்பானி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானி ஏற்கனவே விளையாட்டு துறையில் கால்பதித்துள்ள நிலையில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார்.