
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப். தற்போது 37 வயதான ரொனால்டோ இந்த கிளப்புக்காக 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில்முறை கால்பந்து வீரராக ஐரோப்பிய அணிகளில் இணையாமல், மத்திய கிழக்கு நாட்டின் கிளப் அணியில் ரொனால்டோ இணைந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஆச்சர்யத்தை போக்கும் வகையில், அல் நசர் கிளப்பில் இணைந்ததற்கான காரணத்தை ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ரொனால்டோ, "நான் ஒரு தனித்துவமான வீரர். இங்கு வந்துள்ளதை நல்லது என கருதுகிறேன். ஐரோப்பாவில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளேன். மேலும் சில சாதனைகளை இங்கு முறியடிக்க விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, வெற்றிபெறவும், விளையாட்டை ரசிக்கவும், சவுதி நாட்டின் கலாச்சாரத்தின் வெற்றியின் ஒரு பகுதியாக இருக்கவே இங்கு இணைத்துள்ளேன். ஐரோப்பா அணிகளில் இணைய எனக்கு நிறைய சலுகைகள் வந்தன.