
Saina Nehwal, Kidambi Srikanth Make First Round Exits From Malaysia Open (Image Source: Google)
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஹன் யூவை எதிர்த்து விளையாடினார்.
இப்போட்டியின் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய ஹன் யூ முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாய்னா நேவால் இரண்டாவது செட்டை 21-17 என கைப்பாற்ற ஆட்டத்தின் பரபரப்பு அதிகரித்தது.
அதன்பின் நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஹன் யூ 21-14 என்ற கணக்கில் கைப்பற்றி, 21-12,17-21, 21-12 என்ற செட் கணக்கில் சாய்னா நேவாலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.